×

கிண்டி சிப்பெட் சாலையில் குப்பை கழிவால் சுகாதார சீர்கேடு

ஆலந்தூர்: கிண்டி தொழிற்பேட்டையில் இருந்து ஜவகர்லால் நேரு சாலை வரை செல்லும் சிப்பெட் சாலையின் இருபுறமும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. கிண்டி தொழிற்பேட்டையில் இருந்து ஜவகர்லால் நேரு சாலை வரை செல்லும் சிப்பெட் சாலையின் இருபுறமும் குப்பை கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் இடதுபுறம் சுமார் 400 மீட்டர் அளவிற்கு ஒரே  குப்பை கழிவுகள் அருவறுக்கத்தக்க வகையில் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. கடந்த 6 மாதத்துக்கு மேலாக இந்த நிலை நீடிக்கிறது. இந்த குப்பை, கழிவுகளுக்கு எதிரிலேயே மத்திய அரசு நிறுவனம் மற்றும் சிப்பெட் தொழிற்பயிற்சி நிறுவனம் இருந்தும் மாநகராட்சி அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை.

இந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கவர்கள், சறுகுகள், கட்டிட கழிவுகள் என ஏராளமானவை  தேங்கிக்காணப்படுகிறது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்லும் போதெல்லம் தூசி பறந்து உடைகள் நாசமாகிறது. இங்குள்ள நடைபாதையை இந்த குப்பை கழிவுகள் மூடிவிட்டதால் சாலையோரமாக நடந்து செல்பவர்கள் கட்டிட கழிவுகளால் தடுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான பல்வேறு ஐடி நிறுவனம் தொழிற்சாலைகள் என பல இருந்தும் இங்கு துப்புரவு பணிகள் நடைபெறாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் மாலை நேரங்களில் ஒதுக்குப்புறமாக இந்த சாலைப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள கழிவுகளை உடனே அகற்றி நடைபாதை மற்றும் சாலையினை மேம்படுத்தி சுகாதாரம் காக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Chippet Road ,Kindy , Kindy, Chippet Road, Garbage Disposal, Health Disorder
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...